2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தகவல் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு

Janu   / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட அதிரடிப்படையினருக்கு சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள்  தொடர்பாக தகவல் வழங்கிய இருவர் மீது   வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதாக கூறி மாங்கேணி பகுதியில் வைத்து  இருவர் மீது மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 பேர் கொண்ட ஆவா வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதில்  40 வயதுடைய செல்வபுரம், மாங்கேணியைச் சேர்ந்த பொன்னம்பலம் ஜெயச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது பொன்னம்பலம் சுரேந்திரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளதுடன்  தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் படுகாயமடைந்த இருவரும் மட்டு போதனா வைத்தியசாலையின்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தலைமறைவாகி உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். 

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X