Freelancer / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
“தமிழர்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை மறுப்பதற்கு சரத் வீரசேகர யார்? எமது உரிமைகளை நாங்கள் கேட்கிறோம். இடையில் மறப்பதற்கு இவர் யார்?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வி எழுப்பினார்.
காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த விடுகை விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “1960 களில் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ்ந்த வரலாறு இருக்கிறது. ஆனால் இடை நடுவில் தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று கருதி சரத்வீரசேகர போன்ற இனவாதிகள் போர்க்கொடி தூக்கிய காரணத்தினால் தான் தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கவேண்டி ஏற்பட்டது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டிலே அனைத்து இன மக்களும் சுதந்திரமாக நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் அதிகாரங்களும் உரிமைகளும் சகலருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று அதற்கான காலம் ஓரளவு கனிந்து வருகின்ற வேளையிலே எண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி உடைத்தது போல் சரத் வீரசேகர போன்ற இனவாதிகள் அதனை குழப்ப முயற்சிக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இவர் போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் இந்த நாட்டிலே அமைதியோ நிம்மதியோ சுதந்திரமோ கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

27 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
2 hours ago