Janu / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் பிறந்து 5 மாதங்களேயான ஆண் குழந்தையொன்று தனது தாயின் பிறந்த நாளன்று செவ்வாய்க்கிழமை (09) உயிரிழந்துள்ளது.
செங்கலடி - ரமேஷ்புரத்தை சேர்ந்த இளம் தம்பதியினருக்கு முதல் குழந்தையாக இக்குழந்தை, குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தாயின் 25ஆவது பிறந்த தினத்தன்று உயிரிழந்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகக் கஷ்டமான நிலையில் குழந்தையை பராமரிப்பதற்காக குழந்தையின் தந்தை கடன்பட்டு வெளிநாட்டுக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச்சென்றுள்ள நிலையிலேயே குழந்தை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

5 minute ago
18 minute ago
26 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
26 minute ago
27 minute ago