Freelancer / 2023 ஜனவரி 03 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டின் செயற்றிட்டங்களில் ஒன்றான, நாவலர் வீதி பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர் மு. பத்மவாசன் இவ்வீதி பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார். திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி கமலராஜன், உபதவிசாளர் பி.விக்னேஸ்வரன், திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் க. சதிசேகரன், உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி சகாதேவராஜா, ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர் வ. ஜெயந்தன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே. ஜெயராஜ், திருக்கோவில் பிரதேச செயலக முன்னாள் கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் கண. இராஜரெத்தினம் , திருஞானவாணி அறநெறி பாடசாலை தலைவர் ஆ. கணேசமூர்த்தி, எழுத்தாளர் சு. கார்த்திகேசு, எனய் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில், நாவலர் பெயரில் மூன்றாவது வீதி, திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

28 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago