2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு - 2025

R.Tharaniya   / 2025 மார்ச் 16 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22ஆவது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு - 2025 நிகழ்வில் அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவி ஜெயகோபன் தக்ஷாலினி
'ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மாணவி தக்ஷாலினி அவரது குழுவினருடன் தமிழ்நாடு சென்றிருந்தார்.
அங்கு திருவண்ணாமலையில் குழு நடனம் நடைபெற்றது.திருவையாறு ஔவை அறக்கட்டளை மூலம் திருமூலர் ஆச்சிரமத்தில் நடத்திய 22ஆவது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு  நிகழ்வில் இவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், சிதம்பரம் நடராஜர் சந்நிதானத்திலும் மாணவிகளின் நடனம் நடைபெற்றது.

எஸ். தில்லைநாதன்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X