Janu / 2024 செப்டெம்பர் 29 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்து மிருகவேட்டையாடிவரும் 54 வயதுடைய ஒருவர் வெள்ளிக்கிழமை (27) இரவு துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து விநாயகபுரம் 4ம் பிரிவு , காயத்திரி கிராமம் பகுதியில் குறித்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்ட போது பாவிக்க கூடிய செட்கண் ரக துப்பாக்கியின் 5 ரவைகளையும் வெறுமையான ரவைகள் 3 உட்பட 8 ரவைகளை மீட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
மேலும் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கனகராசா சரவணன்
13 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago