Freelancer / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
தேசிய சமாதான பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட, இனப்பிரச்சினைகள் சார்ந்த விடயங்களின்போது, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான மாவட்ட ரீதியிலான கலந்துரையாடல், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசனின் வழிகாட்டலில், மொழிகள் மற்றும் இன மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர் பிரதிஷ்கரனின் ஒருங்கிணைப்பில், இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் றஸ்ஸான் (நளீமி) தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், அம்பாறை மாவட்ட தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் உவைஸ் மதனி , அம்பாறை பள்ளிவாயல் தலைவர் யூசுப், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல் தௌபிக், றுஹூணு லங்கா அமைப்பின் தலைவர் கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ் ஜௌபர் (நளீமி), திட்ட இணைப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எம் இக்ராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago