Janu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசுவெசும நலன்புரி நன்மைகளை பொதுமக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் "நலன்புரி நன்மைகள் பிரிவு" இன்று கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்கம் அசுவெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்தவுள்ள நிலையில் கல்முனை பிரதேச செயலக பிரிவிலுள்ள பொதுமக்களின் நன்மை கருதியே இதற்கான தனியான பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் உபுல் குமார, அபிவிருத்தி இணைப்பாளர் ஏ.யாசீன் பாவா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (திட்டமிடல்) ஏ.எஸ்.எம்.முஜாஹித், நலன்புரி நன்மைகள் பிரிவு பொறுப்பாளர் ஏ.எல்.ஏ.நஜீபர் உட்பட சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாறுக் ஷிஹான்
2 minute ago
8 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
10 minute ago