2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம்

Janu   / 2025 பெப்ரவரி 09 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி கடலில் சனிக்கிழமை (08) மாலை நீராடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன்  கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காத்தான்குடி நதியா கடற்கரையில் 5 மாணவர்கள்  நீராடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு மாணவன் கடலில் மூழ்கியுள்ளதுடன் ஏனைய நான்கு மாணவர்களும் தப்பியுள்ளனர்.

காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தை முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய  முகம்மது ரமீஸ் முகம்மது  சனாகி  எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காத்தான்குடி நூறானியா வித்தியாலயத்தில் தரம் 11ல் இந்த  மாணவர் கல்வி கற்று வரும் நிலையில் சக மாணவர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது  கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்ற நிலையில் குறித்த மாணவனை   தேடும் பணி மிகவும் சிரமமாக  இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X