Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருள் ஹுதா உமர்
கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக பொறியியலாளர் உதுமாலெவ்வை அஹமட் நஸார், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர், நீர்ப்பாசனப் பொறியியலாளராக , பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வரும் பொறியியலாளர் யூ.எல்.எ.நஸார், உலக வங்கியின் உதவியுடன்செயற்படுத்தப்பட்ட வடக்கு - கிழக்கு நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் சிரேஷ்ட பொறியியலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
கஞ்சிகுடிச்சாறு நீர்ப்பாசனக் குளத்தின் நீர்க்கொள்ளளவை அதிகரிக்கும் வடிவமைப்புக்குப் பொறுப்பாக இருந்து, அதனைச் செவ்வனே செயற்படுத்தி, . நீர்க்கொள்ளளவு அதிகரிக்கப்பட்டமை காரணமாக, பயிர் செய்யும் காணிகளின் அளவு அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக வங்கியின் உதவியுடன் பொத்துவில், லகுகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சிறு குளங்கள் புனரமைப்புக்கும் பொறுப்பாக உள்ளதுடன் அக்குளங்களின் நீர்க்கொள்ளளவு அதிகரிப்படுவது காரணமாக அதிகரித்த உற்பத்தியை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.
கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் என்பதுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானிப் பட்டத்தை சிவில் துறையில் பெற்றதுடன் நிர்மாண முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பினை மேற்கொண்டவராவார்.

37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago