Editorial / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். கீதபொன்கலன்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநகர் கிராமத்தில் இன்று புதன்கிழமை (08) காலை பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஈச்சிலம்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பகுதியிலுள்ள மரமொன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்களின் விபரம்:
துப்பாக்கி ரவைகள் – 694
61 ரக மோட்டார் குண்டுகள் – 04
மோட்டார் பியூஸ்கள் (Fuse) – 02
மோட்டார் குண்டு சார்ஜர்கள் – 06
ஆர்.பி.ஜி (RPG) குண்டு – 01
இச்சம்பவம் குறித்து அறிந்த சேருநுவர பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.டி. பண்டார மற்றும் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெனீப் ஆகீர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


9 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago
1 hours ago