2025 மே 14, புதன்கிழமை

பாடசாலை நுழைவாயில் மோதிய லொறி

Janu   / 2025 மே 07 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதான வீதியில்  இடம் பெற்ற விபத்தில் காத்தான்குடி மீரா பாலிகா பாடசாலை பிரதான நுழைவாயில் சேதமடைந்துள்ளதுடன் மின் தூன்களும் சேதமடைந்துள்ளது.

மன்னாரில் இருந்து வந்த தாழங்குடாவைச் சேர்ந்த மீன்லொறி 07) புதன்கிழமை (07)  காலை  வேகக்கட்டுப்பாட்டை இழந்து காத்தான்குடி மீரா பாலிகா பாடசாலை பிரதான நுழைவாயிலில்  மோதி இந்த  விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த வாகனத்தின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித  ஆபத்துக்களும் ஏற்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

எம். எஸ் .எம். நூர்தீன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X