Janu / 2024 ஜூலை 14 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான எரிபொருள் பௌஸர் ஒன்று , புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்து ஞயிற்றுக்கிழமை (14) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
விபத்தில் சிக்கிய எரிபொருள் பௌஸரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வீதியோரமிருந்த தனியார் வளாகத்தின் மதில்ப்பகுதியும் சேதத்துக்குள்ளாகி , இலங்கை ரெலிக்கொம் தொலைத்தொடர்பு வலையமைப்பின் தூண்களும் உடைந்துள்ளது .
இதனால் குறித்த பிரதேச தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது
மேலும் , இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

13 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
51 minute ago