Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 மே 06 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட் ஒருவர் செவ்வாய்க்கிழமை (06) காலை தனது சேவை துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சார்ஜெண்டின் மனைவி கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிகாரி திங்கட்கிழமை (05) அன்று இரவு நேர சேவையில் அமர்த்தப்பட்ட நிலையில் அவர் தனது கண் பார்வை மோசமாக இருப்பதாக கூறி, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பொலிஸ் சாவடிக்கு தன்னை நியமிக்குமாறு கோரியுள்ளதுடன் இன்று காலை தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துள்ளார் .
குறித்த சார்ஜென்ட் பிபில, தியகோபால பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago