2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Editorial   / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதாக பிரீமா (Prima) நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 'பிரீமா மில்க்'   ரக கோதுமை மாவின் விலை ஒரு கிலோகிராமுக்கு 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பின் படி, இதுவரை 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் மாவின் புதிய சில்லறை விலை 225 ரூபாயாக உயர்ந்துள்ளது.

போக்குவரத்துச் செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .