2026 ஜனவரி 14, புதன்கிழமை

போதைப்பொருளுடன் இருவர் கைது

Janu   / 2026 ஜனவரி 06 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் , போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் காத்தான்குடி பொலிஸாரினால் திங்கட்கிழமை(5) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லடியில் இருந்து சம்மாந்துறை நோக்கி 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து போதை பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்த நபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது

குறித்த நபர்கள் வாழைச்சேனையை சேர்ந்த  26 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

ரீ.எல்.ஜவ்பர்கான்  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .