Freelancer / 2023 ஜனவரி 25 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம் அஹமட் அனாம்
போதைப்பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களால் கையாளப்படுகின்ற நாடாக இலங்கை மாறியிருப்பது, கவலையான விடயம் என்று ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ றியாஸ் தெரிவித்தார்.
ஓட்டமாவடி ஹீரோலைன்ஸ் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொது கூட்டமும் ‘போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கும் ஓட்டமாவடி ஹன்ஸா அரிசி ஆலை வளாகத்தில், கழகத்தின் தலைவர் எஸ்.எல் நளீர் தலைமையில் திங்கட்கிழமை (23) இரவு நடைபெற்ற போதே பிரதி திட்ட பணிப்பாளர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதற்காக மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து செயற்படுகின்றனர். போதைப் பொருட்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய இரசாயன பொருட்கள், நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற பொருட்கள்தான் அதில் அதிகம் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் அதில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதுடன், நம்மை சூழவுள்ளவர்களையும் பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago