Janu / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது: மனிதக் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எருமை மாடுகளை வளர்த்து வந்த நபருக்கு எதிராக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (24) மாலை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இவ்விசாரணை முன்னெடுக்கப்பட்டது. சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில், பின்வரும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்று நேரடிச் சோதனையில் ஈடுபட்டனர்:
சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.
பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பதிகாரி.
டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள்.
சோதனையின் போது, மனிதக் குடியேற்றத்திற்குப் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகள் வளர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தவர்களுக்குப் பெரும் அசௌகரியம் ஏற்படுவதுடன், சுகாதாரச் சீர்கேடுகள் உண்டாகும் அபாயமும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக 'பொதுமக்கள் தொல்லை தடுப்புச் சட்டத்தின்' கீழ் வழக்குத் தாக்கல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்

18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago