Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
தற்போது அமுலில் உள்ள பொது முடக்கத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும், கசிப்பு உற்பத்தி செய்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
இன்று (23) மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் புதூர் பகுதியில் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போதே இரு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த சாராயம் மற்றும் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டன.
இதன்போது 5 லீற்றர் கசிப்பு மற்றும் பெருமளவு போத்தல்கள், டின்களில் அடைக்கப்பட்ட மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் பொருட்களும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago