Janu / 2024 ஜூன் 26 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் , மா மரமொன்றில் ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி - மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பாறூக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
நாவலடியிலுள்ள தனது வளவினுல் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பரிக்க மரத்தில் ஏறியபோது மரத்திலிருந்து தவறி விழுந்த குறித்த நபர் , படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்த நபரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
எச்.எம்.எம்.பர்ஸான்

28 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
19 Nov 2025