R.Tharaniya / 2025 மார்ச் 30 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடமையில் இருந்த பெண் வைத்தியர்களை குறிவைத்து தொலைபேசி ஊடாக மர்ம நபர் ஒருவர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி அவர்களை குழப்பமடைய வைத்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலையில் இடம் பெற்றுள்ளதை அடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த வைத்தியசாலை தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்துக்கு சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 2.00 மணிக்கு இனம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கொண்டு சில வாட்டுக்களுக்கு தொலைபேசி அழைப்பை மாற்றுமாறு கோரியுள்ளார். அந்த அழைப்புகள் மாற்றப்பட்டதை அடுத்து குறித்த மர்ம நபர் அங்கு கடமையில் இருக்கும் வாட் பொறுப்பாளர் மற்றும் பெண் வைத்தியர்களின் கையடக்க தொலைபேசிகளை பெற்று அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் பேசியுள்ளார்
இவ்வாறு அதிகாலை 2.00 மணி தொடக்க காலை 6.00 மணி வரை 13 பேருடன் தொடர்பை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட வைத்தியர்கள், பொறுப்பாளர்கள் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அதையடுத்து இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் சைபர் கிரைம் பிரிவிலும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு ஏற்படுத்திய போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனகராசா சரவணன்
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago