Janu / 2025 மே 28 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரினால் ஓட்டமாவடி பகுதியில் வைத்து புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஏறாவூரில் உள்ள பழவகை கடையொன்றில் மாதுளம் பழங்கள் அடங்கிய பெட்டியை சூட்சுமமாக திருடி அதை ஓட்டமாவடியில் உள்ள பழவகை கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஓட்டமாவடியைச் சேர்ந்த பழவகைக் கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் வசமாக சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர், வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பல திருட்டுச் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
4 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago