R.Tharaniya / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை (18) மாலை சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 1 பிள்ளையின் தந்தையான சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த முஹமட் முஸ்தபா முஹமட் சியாம் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபர் மற்றொரு நபருடன் வேலையின் நிமித்தம் வயலுக்கு சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.அவருக்கு அருகில் வயல் வேலையில் ஈடுபட்டவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர் குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் மின்னல் தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்
31 minute ago
53 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
53 minute ago
1 hours ago
4 hours ago