Janu / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது இல்ல வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.சி. சமால்டீன் உட்பட கட்சியின் சாய்ந்தமருது பிரதேச வட்டார அமைப்பாளர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சாய்ந்தமருது பிரதேசத்தில் துரித கதியில் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதற்காக கட்சி பிரமுகர்களும் வட்டார அமைப்பாளர்களும் கட்சிப் போராளிகளும் முரண்பாடுகள் எதுவுமின்றி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அஸ்லம் எஸ்.மௌலானா


15 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
4 hours ago