R.Tharaniya / 2025 ஜூலை 30 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் புதன்கிழமை (30) அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சேகு முகம்மது றம்சூன் (வயது 45) என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இன்று அதிகாலை களப்புக் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ள நிலையில் களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மீன்பிடிப்பதற்காக சென்ற மற்றொரு மீனவரொருவர் நீரில் மிதந்த நிலையில் சடலமொன்று கிடப்பதை கண்டு மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் மூதூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த மீனவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ்.கீதபொன்கலன்
9 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Mar 2026