2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மோசடி செய்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு

Janu   / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் விவசாயிகளிடமிருந்து சட்டவிரோத கள்ள தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்ட எட்டு வியாபாரிகள் மீது புதன்கிழமை (07)  வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டுத் திணைக்கள பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது,  இதில் அரச அனுமதியற்ற 5 தராசுகள் மற்றும் அளவையில் மோசடி செய்யப்பட்ட 3 தராசுகள் உள்ளிட்ட 8 தராசுகளை கைப்பற்றியதுடன் அதனைத்  திணைக்களத்திற்குக்  கொண்டுசென்றுள்ளதாகத்  தெரியவந்துள்ளது.

நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசுகளை  பரிசோதனை செய்யுமாறு அரசாங்க அதிபர் முரளிதரனினால் விடுக்கப்பட்ட  பணிப்புரைக்கமையவே  இவ் நடவடிக்கை  மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், கைப்பற்றி கொண்டுவரப்பட்ட தராசுகளை அரசாங்க அதிபர்  நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதுடன், தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .