Janu / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை(13) அன்று ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை சேர்மன் கனகரெத்தினம் வீதியை சேர்ந்த வேலும் மயிலும் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்

08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026