Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
யானை – மனித மோதலை தடுக்க நீதிக்கான மய்யம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போதே மாநாடு நீதிக்கான மய்யத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் வைத்து புதன்கிழமை (07) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசமானது யானைகள் வாழ்கின்ற பிராந்தியம் அல்ல. குறிப்பிட்ட காலங்களில் அம்பாறை மாவட்டத்தினுள் வருகின்ற யானைகள் அம்பாறை மாவட்ட யானைகள் இல்லை. வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு யானைகள் இங்கு விடப்படுவதான குற்றச்சாட்டு ஆராயப்பட வேண்டியுள்ளது.
தற்போது இவ்விடயம் பாரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கான தீர்வு பெற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் யானை-மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கலை எமது அமைப்பு மேற்கொண்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்று கடந்த திங்கட்கிழமை (05) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 5 வருடங்களில் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கிழக்கு மாகாணம் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகமாக காணப்படுவதாகவும் இதற்கு தீர்வு வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு எதிராக எமது அமைப்பு குறித்த எழுத்தாணை மனுவை தாக்கல் செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
பாருக் ஷிஹான்
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago