Nirosh / 2021 ஜனவரி 23 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - ரங்கிரிபொத்த உல்பொத்த பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (23) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் கோமரங்கடவல-நாவுல் பொத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வேட்டையாடுவதற்காக துப்பாக்கிக்கு போடுவதற்கு ரவைகளை செய்து கொண்டிருக்கும்போது, அவர் செய்த ரவைகள் வெடித்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்தவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தற்பொழுது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago