Editorial / 2026 மார்ச் 11 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு. புவனரூபனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், விசேட தேவையுடைய ஒருவருக்கு கோழிக்கூடு மற்றும் கோழிக்குஞ்சுகள் வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டுக்கான பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அன்னமலை 02, குடியிருப்புமுனையைச் சேர்ந்த வீரகுமாரன் சோமசுந்தரம் என்பவருக்கு கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் நோக்கில் நேற்றைய தினம் (10) இவ்வுதவிகள் கையளிக்கப்பட்டன. பிரதேச சபை உப தவிசாளரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபையினால் இவை கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago