2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வாய்க்காலுக்குள் புரண்டது ஆம்புலன்ஸ்

Editorial   / 2025 ஜனவரி 21 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பால தோப்பூர் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனமும், கெப் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்துள்ளது.இதனால் ஆம்புலன்ஸ் வண்டியில் வந்த இருவர்  காயமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (21) பகல் இடம்பெற்ற இவ் விபத்தில் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதியும் மற்றொரு வைத்தியசாலை ஊழியரும் படுகாயமடைந்து கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர் தள வைத்தியசாலையில் நோயாளிகளை இறக்கிய பின்னர் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையை நோக்கி வரும் வழியிலேயே அந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .