Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
வாழைச்சேனை மீனவர்களுக்கும் கல்முனை மீனவர்களுக்கும் இடையில், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திலும் கடற்கரைகளிலும் தொடரும் முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் பேச்சுவார்த்தை, மாளிகைக்காடு அந்நூர் கலாசார மண்டபத்தில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம் றியாஸின் ஒருங்கமைப்பில் இடம்பெற்றது.
உலமாக்கள், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எஸ். ஜெகத், அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ், மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எம் பௌசர், வாழைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன உப தலைவரும், பொலிஸ் பரிசோதகருமான ஏ. அமீரலி உட்பட மீனவர்கள் சங்கங்கள் கலந்துகொண்டு, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வொன்று முன்வைக்கப்பட்டது.
படகு தரித்தல், மீன் விற்பனை, போதையொழிப்பு, மீனவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள், மீன் வியாபாரிகளுடனான உறவுகளை பேணுதல் போன்ற விடயங்களை ஆராய்ந்து, ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பிலும், இருதரப்பினதும் அங்கத்துவத்துடன் கூடிய கண்காணிப்பு நிர்வாக குழுவை அமைப்பது தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

26 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
2 hours ago