Janu / 2024 ஜூன் 30 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் - பதுளை வீதியில் ,மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது .
செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த , இரு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய தோமஸ் டயஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் தொழில் நிமித்தம் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது , எதிரே வந்த மினி வேன், பாதை மாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
வேன் சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வேனின் சாரதியை கைது செய்த கரடியனாறு பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
எச்.எம்.எம்.பர்ஸான்



19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025