Freelancer / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிகளில் தற்போது விவசாய நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் டீசல் விநியோகமும் சீராக இடம் பெறுகின்றன.
குறித்த டீசல் விநியோகமானது முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக நேற்று (20) இடம் பெற்றது. கமநல அபிவிருத்தி நிலையம் ஊடாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பு தலா 10 லீற்றர் என்றவாறு சீரான விநியோகம் இடம் பெற்றது. தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கமநல சேவை அபிவிருத்தி நிலையங்கள் ஊடான முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இவ் விநியோகம் இடம் பெற்றது.
இதனால், அறுவடை நேரங்களில் எவ் வித தடையின்றி இயந்திரம் ஊடாக நெல் அறுவடையினை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. (a)
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago