2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

வெற்றுக்காணியிலிருந்து கைக்குண்டு மீட்பு

Janu   / 2026 ஜனவரி 07 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் சவளக்கடை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியின் பாடசாலைக்கு அருகில் உள்ள வெற்றுக் காணி  ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில்  கைக்குண்டொன்று செவ்வாய்க்கிழமை (6)  மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட   கைக்குண்டை செயலிழக்கச் செய்ய  விசேட அதிரடி படையினரால்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பான குறித்த கைக்கண்டு கடந்த காலங்களில் இப்பகுதியில் நடமாடிய விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் இக்காணி உழவு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மழை காரணமாக புதைந்திருந்த இக்கைக்குண்டு நிலத்தில் மேல் தெரிந்துள்ளது.

குறித்த காணி வழியாக பாடசாலைக்கு தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் இதனை இனங்கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

மேலும் மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக  நீதவான் நீதிமன்ற கட்டளையைப் பெற்று  மேலதிக விசாரணைகளை சவளக்கடை  பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர்    தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .  

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .