Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 13 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
துப்பாக்கி வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்கள் இருவர் வேட்டைக்கு சென்ற போது அவர்கள் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஓட்டமாவடி - நாவலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இம்தியாஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , அவருடன் வேட்டைக்குச் சென்ற நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .