2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

Freelancer   / 2023 நவம்பர் 19 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் அம்பாறை மாவட்ட கோனோகொல்ல  கிராமத்திற்கு விஜயம் செய்த போது அப்பகுதி மக்கள் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு  கோரிக்கை  முன்வைத்ததுடன், அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்  விமலவீர திஸாநாயக்க அவர்களால் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. 
 
அந்த வேண்டுகோளுக்கு இணங்க ரூ. 34 மில்லியன் பெறுமதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோனோகொல்ல கிராமத்தில் வைத்தியசாலை நிர்மாணிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அடிக்கல் நாட்டப்பட்டது.
 
ஆளுநரின் முயற்சியால் கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு மாத காலத்திற்குள் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
 
ஆளுநரின் இந்த துரித நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட மக்கள்  நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .