Ilango Bharathy / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கல்முனைமாநகரில் அமைக்கப்பட்டிருந்த வீதிப்பெயர்ப் பலகையொன்றினை உடைத்ததாக த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் மீது தொடரப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆறு வருடங்களாக இவ்வழக்குவிசாரணை கல்முனை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது.
இவ்வழக்கின் 34ஆவது தவணை கடந்த 15 ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எம்.சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அச்சமயம் கல்முனை மாநகரசபையின்கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அவர் அதற்கு பூரண தயார்நிலையில் இல்லாமையினால் மேலதிக விசாரணைக்காக வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு நீதிவான் சம்சுதீன் ஒத்திவைத்தார்.
ஹென்றிமகேந்திரன்சார்பில் பிரபல சிரேஸ்டசட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தாவின் வழிநடாத்தலில் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ,சட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இந்நிலையில் 35ஆவது தவணையின்போது எதிர்பாராத திருப்பம் ஏற்டலாமென தெரிவிக்கப்படுகிறது.
9 minute ago
20 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
33 minute ago
42 minute ago