Editorial / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஏந்து பகுதிகளில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், வியாழக்கிக்கிழமை (09) அன்று தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சியின் அறிவுறுத்தலுக்கமைய, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர், நீர்ப்பாசனப் பணிப்பாளர், சகல பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், வனப் பரிபாலன மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சடயந்தலாவ ஆற்றில் கடும் எச்சரிக்கை
குறிப்பாக, உஹன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சடயந்தலாவ ஆற்றில் தற்போது நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, அங்கு ஆழமான கற்பாறைகளும் உள்ளன. இதனால் இப்பகுதி பாதுகாப்பற்ற இடமாக அடையாளப்படுத்தப்பட்டு, அங்கு நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக சடயந்தலாவ ஆற்றுக்கு நீராட வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும், ஆற்றின் தற்போதைய அபாயகரமான நிலைமையினால் உயிராபத்துகள் ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
சுற்றாடல் பாதிப்பு
நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை வீசுவதால் சுற்றாடல் மாசடைவதுடன், காடுகள் தீப்பற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது நீராடுவதற்காகவோ இந்தப் பகுதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை
தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தடை உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பிரதிப் பணிப்பாளர் றியாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
45 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
5 hours ago