Mayu / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (09) காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாவதற்கு முன்னதாக, மாநகர சபை முன்றலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் கருப்பு ஆடை அணிந்திருந்ததுடன், கைகளில் கருப்புப் பட்டிகளைக் கட்டியும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மாநகர சபையின் பிரதான நுழைவாயிலில் இருந்து சபை மண்டபம் வரை பேரணியாகச் சென்ற உறுப்பினர்கள், அங்கு தமது போராட்டத்தை நிறைவு செய்தனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான திலினி ஜயகொடி மற்றும் முஹம்மத் நுஸ்ரி ஆகியோர் பின்வருமாறு குறிப்பிட்டனர்:
எம்.இஸட். ஷாஜஹான்
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago