Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 03 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனையில் சட்ட விரோதமாக ஒன்று கூடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேரை வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவில் ஒன்று கூடி பொழுது போக்குக்குக்காக 304 விளையாடி வருவது வழக்கமாகிக்கொண்டு வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (29) இரவு ஒன்று கூடி வெள்ளிக்கிழமை ( 01) அதிகாலை வரை விளையாடிக் கொண்டிருந்த போதே பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இது தொடர்பான விசாரணைகளுக்கு பின்னர் பொலிஸாரால் , குறித்த நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒருவருக்கு தலா ஒரு லட்சம் சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
இது தொடர்பான அடுத்த வழக்கு இம்மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
எம். எஸ். எம் .நூர்தீன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .