2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஸ்ருதி ஹாசன் விபத்தில் சிக்கினார்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகர் சூரியாவுடன் 'ஏழாம் அறிவு' படத்தில் ஸ்ருதி ஹாசன் ஜோடிசேர்ந்து நடித்துவருகிறார். ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தின் மிகவும் வேகமாக படப்பிடிப்பு நடந்துவரும் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வேளச்சேரி – தாம்பரம் சாலையில் நடைபெற்றது. வில்லன்களிடம் மாட்டிக்கொள்ளும் ஸ்ருதி ஹாசனை கதாநாயகன் சூரியா சண்டை போட்டு காப்பாற்றுவதுபோல் காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக ஸ்ருதி காயமடைந்தார். இதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஸ்ருதி ஹாசன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சிறிது நேரத்தின் பின்னர் சூரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டன. தமிழில் ஸ்ருதி ஹாசன் அறிமுகமாகும் முதல் படம் ஏழாம் அறிவு என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .