Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ந்து பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் திரிஷா, அண்மையில் சிக்கியிருப்பது போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு பற்றி. இந்த விவகாரத்தில் திரிஷாவின் பெயர் கெட்டுவிட்டதில் பல முன்னணி நடிகைகளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லையாம்.
இந்நிலையில் சரிந்துபோயுள்ள தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளாராம் திரிஷா. பத்திரிகையாளர்களை திடீரென அழைத்த அவர், மற்றவர்களுக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். குறிப்பாக நடிகை அசினுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். புளித்துப்போன விடயத்தை மீண்டும் தூசுதட்டி, அசின் இலங்கை படப்பிடிப்பில் கலந்துகொண்டது தவறு என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், கேட்டாலும் வாய்திறக்காத அவரது திருமண விடயம் பற்றியும் தானாகே கொட்டித் தீர்த்திருக்கிறார். எனக்கு காதல் கல்யாணம் தான் பிடிக்கும். தெரியாதவர்களை மணம் முடித்து என்னால் நிம்மதியாக வாழமுடியாது என புதிய கதைவிட்டிருக்கிறார் திரிஷா.
எதையாவது புதிதுபுதிதாக அறிவித்தல் விட்டு, அண்மைய போதைப்பொருள் விவகாரத்தை மூடிமறைக்கத்தான் பார்க்கிறார் திரிஷா. ஏதோ… நல்லா இருந்தா சரிதான்…
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago