2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

'நான் அதிர்ஷ்டக்காரி' - ஐஸ்வர்யா

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்ல கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்கள் வரும் காலம் மிகக் குறைவாகவே காணப்படும். அவ்வாறான காதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு சரியான இடைவெளியில் தன்னைத் தேடி வருவது மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்துள்ள முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய், "தான் ஒரு அதிர்ஷ்டக்காரி" என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், 'எனக்கு தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஆக்ஷன் ரீப்ளே படங்களிலும் கூட எந்தவொரு நடிகையையும் பார்த்து நடிக்கவில்லை. நானேதான் அதில் தெரிந்தேன். நகைச்சுவைப் படமாக இருந்தாலும் எனது நடிப்புத் திறமைக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் ஐஸ்வர்யா ராய்.இதேவேளை "தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி சூப்பர் ஸ்டார் ரஜினிதான்" என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் அண்மையில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த படம் எந்திரன். இது சன் பிக்சர்ஸின் முதல் படமாகும். தற்போது உலகம் முழுவதிலுமுள்ள நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வசூலை அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஸ்டார் டிவியில் கொஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் - ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றனர். இதன்போது ஐஸ்வர்யா ராய்க்கு பொருத்தமான ஜோடி யார் என்ற கேள்வி அபிஷேக்கிடம் எழுப்பப்பட்டது. அதற்கு, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" என்றார் அபிஷேக்!

"படையப்பாவிலிருந்து தனது படங்களுக்கு ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார் ரஜினி. பல்வேறு காரணங்களால் அமையாமல் போய்விட, இறுதியாக எந்திரனில் அவர்கள் ஜோடி சேர்ந்தனர். அவர்களது ஜோடிப் பொருத்தம் பிரமாதம்" என்றார்.

அத்துடன், 'ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக்கும் திரையில் அழகான ஜோடிகளாகத் தெரிகின்றனர். ஷாரூக்குடன் ஐஸ்வர்யா நடித்த படங்கள் பொக்ஸ் ஒபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து ஷாரூக்கின் படங்களில் ஐஸ் நடிப்பார்.

இருப்பினும் ரஜினி சார் பிரமாதம். அவருடனான ஐஸின் ஜோடிப் பொருத்தம் கச்சிதம். நான் எந்திரன் பார்த்தேன். ரஜினி - ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடியாக ஜொலித்தனர்" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் அபிஷேக்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .