2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

தப்ஸிக்காய் தவிக்கும் மும்பாய்...

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தூக்கலான பெயர் வைத்தால் உடனே உச்சத்துக்கு சென்றுவிடலாம் என்பதுபோல் நடிகை தப்ஸிக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. 'ஆடுகளம்' படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகியவர் தப்ஸி. அந்த படம் முடிவதற்குள்ளாகவே 'வந்தான் வென்றான்' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

இந்த அதிர்ஷ்டம் போதாதென்று ஹிந்தி படத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பமும் அடித்திருக்கிறது தப்ஸிக்கு. ஹிந்தியில் பிரபலமாக டேவின் தவானின் இயக்கத்தில் உருவாகும் 'சாஸ்தே பதூர்' என்ற படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பே தப்ஸிக்கு கிடைத்திருக்கிறது.

தமிழிலேயே தூக்கலாக நடித்தவர், ஹிந்தியில் எப்படி நடிப்பார் என்று சொல்லியா தெரியவேண்டும். தனது ஒட்டுமொத்த 'திறமை'யையும் காட்டி நடிக்க தயாராகிவிட்டாராம் தப்ஸி.

தற்சமயம் வந்தான் வென்றான் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அதனை முடித்துக்கொண்டு முப்பாய்க்கு பறந்துவிட முண்டியடிக்கிறாராம் தப்ஸி. பாவம் தமிழ் ரசிகர்கள்...!


  Comments - 0

  • ki Wednesday, 06 April 2011 08:14 PM

    நடிகைகள் தங்களை முழுமையாக அர்ப்பணிக்காவிட்டால், இத்தனை படம் கிடைக்குமா ???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .