2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அனர்த்த விவாதம்: ஒன்பதரை மணிநேரம் விவாதம்

A.Kanagaraj   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்று (09) ஒன்பதரை மணிநேரம் தொடர்ச்சியாக இடம்பெறும் என்ற சபாநாயர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்றுக்காலை 10:30 க்கு ஆரம்பமான விவாதம், இரவு 8 மணிவரையிலும் இடம்பெறும்.

நாடாளுமன்றம் கூடுகின்ற போது, சம்பிரதாயமாக இடம்பெறும், வாய்மூல விடைக்கான வினாக்கள், நிலையியற் கட்டளையின் பிரகாரம் மேற்கொள்ளவேண்டிய விசேட கூற்று, உள்ளிட்டவை இன்றியே இந்த விவாதம் ஆரம்பமானது. அத்துடன், பகல் சாப்பாட்டுக்கும் இன்று நேரம் ஒதுக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .