2021 ஜூன் 19, சனிக்கிழமை

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று மட்டக்களப்பு விஜயம்

Super User   / 2010 மார்ச் 19 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மீளிணக்கப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை முடிவுக்கு கொன்டுவருவதற்காகவும்,தேர்தல் பிரசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தாம் செல்லவுள்ளதாக வும் அமைச்சர் முரளிதரன் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கு இடையில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்துக்கு மட்டக்களப்பிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை,ஓட்டமாவடி பாலத்தை திறந்துவைப்பதற்காக எதிர்வரும் 24ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .