2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அம்பாறை,திருமலை மாவட்டங்களில் மாத்திரம் அதாவுல்லாவின் கட்சி வெற்றிலைச்சின்னத்தில் போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 27 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

இறுதி நேரத்தில் தனித்துப்போட்டியிடும் என் எதிர்ப்பார்க்கப்பட்ட அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுவதாக கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

தங்களுடைய பிரதிநித்திதுவம் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையின் காரணமாகவே தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய காங்கிரஸ் தலைவர்,அமைச்சர் அதாவுல்லா பொத்துவில் தொகுதியில் போட்டியிடுவதாகக்கூறிய எம்.எஸ்.உதுமாலெப்பை தமது கட்சியின் வேட்பாளர்கள் கல்முனை,சம்மாந்துறை தொகுதிகளிலும்,திருகோணமலை மாவட்டத்திலும் மாத்திரம் போட்டியிடுகின்றனர் என்று தெரிவித்தார்.

இதேவேளை,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஐந்து ஆசனங்கள் அம்பாறை மாவட்டத்தில் கிடைக்கும் என்றும் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

எனினும்,ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ,அரசாங்கத்திலுள்ள சிறுபான்மைக்கட்சிகளை திட்டமிட்டு இல்லாமல் செய்கின்றார் என்று தமிழ் மிரர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதுமாலெப்பையிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .