2021 ஜூன் 19, சனிக்கிழமை

அம்பாறையில் ஆளும் கட்சியில் போட்டியிட்ட பேரியல் அஷ்ரப் தோல்வி

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தோல்வியடைந்துள்ளார்.

கல்முனையிலிருந்து இத்தகவலை நம்பத்தகுந்த வட்டரங்கள் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு ஊர்ஜிதப்படுத்தின.

பேரியல் அஷ்ரப் நுஆ என்றழைக்கப்படும் தேசிய ஐக்கிய முன்னணிக்கட்சியின் முன்னாள் தலைவியாவார்.

நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இவர்  இணைந்துகொண்டார்.

பேரியல் அஷ்ரபுடன் இணைந்து  சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  சம்மாந்துறை  ஏ.எம்.எம்.  நௌஷாத்  இத்தேர்தலில் தெரிவு செய்யப்படவில்லை. இவர் எட்டாவது  இடத்தில் உள்ளார்  என்றும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .