2021 ஜூன் 19, சனிக்கிழமை

அரசில் இணைந்துள்ளவர்கள் ஈழம்வாதிகள் இல்லையா ? - அர்ஜுண

Super User   / 2010 மார்ச் 22 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை ஏன் ஈழம்வாதிகள் என்று அரசாங்கம் கூறுவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க கேள்வி எழுப்பினார்.

தனியாகப்போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை மாத்திரம் அரசாங்கம் ஈழம்வாதிகள் என்று கூருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையின் தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில்  ஒளிபரப்பாகி
க்கொண்டிருக்கும் சிங்கள மொழியிலான அரசியல் விவாத நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சற்று முன்னர் இந்தக்கேள்வியை முன்வைத்தார்.

களுத்துறை மாவட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் கிண்ணம் சின்னத்தில்   அர்ஜுண ரணதுங்க போட்டியிடுகின்றார்.

அரசியல் விவாத நிகழ்ச்சியில் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில்  போட்டியிடும் திலங்க சுமதிபாலவிடமே இக்கேள்வி எழுப்பப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .